Wednesday, February 27, 2008

ஒரு விண் மீன் இன்று சில்லுச் சில்லாய்ச் சிதறுதே

இரு விழிகளும் விழிகளும் இணைந்தன
இரு இமைகளும் இமைகளும் இமைத்தன
ஒரு வேதியல் மாற்றம் நேருதே
தட்பம் வெப்பம் தடுமாறுதே

மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய்த் தூறலோ என் உயிரிலே

இது தூறலா மழைச் சாரலா
இது கானலா இள வேனிலா
இது மீறலா பரிமாறலா
இது காதலா கண் மோதலா

யாரிடமும் தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டியும் வேர்க்கிறேன்
கார் மேகம் வந்து மோதியே
ஒரு விண் மீன் இன்று சில்லுச் சில்லாய்ச் சிதறுதே

யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதுமில்லை இனிமேல்
நான் அறியாமல் உனை ரசித்தேன்
என் மௌனங்களை மொழி பெயர்த்தேன்
உன்னைக் கண்ட பின்னே எந்தன்
பெண்மைகளும் உயிர் பெறுதே
கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட
வெட்கங்களும் வெளி வருதே
தரையினில் நின்ற போதும் மிதக்கிறேன்
அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னைத் தந்து உன்னை வாங்க வந்தேனே
இள வேனிற் காற்றின் வெப்பம் தாக்க நின்றேனே

யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதுமில்லை இனிமேல்

நான் கனவுகளைக் கண்டதில்லை
களவாய் யாரிடமும் சென்றதில்லை
முன்னே பின்னே பார்த்ததில்லை
இருந்தும் மனம் உனை நாட
முந்நூறாண்டு ஒன்றாய் வாழ்ந்த
ஞாபகத்தில் தடுமாற
விரல்களில் மோதிரங்கள் நீக்கினேன்
உன் விரல் தேடி வந்து கோர்க்கிறேன்
இந்தச் சொல்லும் இந்தக் கணமும் நிற்கட்டும்
நமை வானம் வந்து ஈரக்கையால் வாழ்த்தட்டும்

யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதுமில்லை இனிமேல்

No comments: